உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மக்கள் படாத துன்பங்களே கிடையாது என்கிற அளவில் அனைவரையுமே பாதித்துள்ளது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனைக் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பு மருந்து போடத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா ஏற்படுவது, எதிர்ப்புச்சக்தி உடம்பில் குறைவாக இருப்பதால் என்பது மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது.
முதியவர்களுக்காக போடப்படும் தடுப்பு மருந்து விண்ணப்பம் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அந்நாட்டு அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
புளோரிடாவில் தற்போது இரண்டாம் சுற்று தடுப்பு மருந்து செலுத்தும் விண்ணப்பம் வெளியாகியுள்ளது. அங்கு வசிக்கும் இரு பெண்கள் இதனை தவறான முறையில் உபயோகித்துள்ளார்கள். அவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் அவர்களது வயது 65 என தவறாக பதிவேற்றம் செய்து கொரோனா தடுப்பு மருந்து போடும் அனுமதியை பெற்றுள்ளனர்.
அதற்காக அவர்கள் தடுப்பூசி போடப்படும் இடத்திற்கு முதியவர்கள் ஆகவே வேடமிட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காவலர்கள் இதனை கண்டுபிடித்து அவர்களை விசாரித்த பொழுது அவர்களின் உண்மையான வயது 34 மற்றும் 44 ஆக இருந்தது. இவர்கள் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக இவ்வாறு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு முதல் முறை தடுப்பு மருந்தும் இவ்வாறாகவே செலுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவலர்கள் அவர்களை கடுமையாக கண்டித்து அனுப்பியுள்ளனர்.