என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

0
140

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார்.

பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது திமுக உற்பத்தி தேர்தலில் சில சலசலப்புகளை தவிர்த்து பொதுவாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. போட்டியிடுவது மட்டும் அல்லாமல் விட்டுக் கொடுப்பதும் ஜனநாயகம் தான் என்பார் அண்ணா.

சில நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருப்பது கூட கட்சிக்கும் துரோகம் செய்வது போல தான் இன்று தெரிவித்தார் அதோடு தங்களுடைய அனைத்து செயல்பாடுகளும் தலைமை கழகத்தால் கண்காணிக்கப்படும். எந்த ஒரு மனிதரையும் விட திமுக கொள்கை தான் பெரிது என்று செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில் எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. நேற்று பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

அவர் தன்னுடைய பேச்சில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக முக்கியமான சக்தியாக திகழ வேண்டும் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மிக அவசியம்.

பாஜக வெற்றி பெறுவதற்கு எந்த விதமான கீழ்த்தரமான செயலையும் செய்யக்கூடும் அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள்.

ஆகவே பாஜக மூச்சி திணறுகிறது ஜெயலலிதா தலைமைக்குப் பிறகு அதிமுக கலகலப்பு போய் கிடக்கிறது அதிமுகவின் பிளவுகளில் குளிர் காய நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனாலும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக எந்த விதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை அதோடு ஆளுநரை கூட திமுக கண்டிக்கவில்லை. பல மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் அது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இது திமுகவினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

ஏன் இப்படி தீர்மானம் நிறைவேற்றாமல் பொதுக்குழு நடத்தி இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது இது தொடர்பாக திமுக வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் மிக விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுகவில் நடைபெறும். அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்க வேண்டும் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர், துணை பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் பதவியேற்க வேண்டும். ஆகவே இதில் வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மற்றபடி தீர்மானங்களை நிறைவேற்றாமல் போனதற்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.