Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!

Chithirai Month Baby Born

#image_title

தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையில் தமிழ் மாதத்தின் வருடப்பிறப்பாக பார்க்கப்படும் மாதம் என்றால் அது சித்திரை மாதம் தான். அது மட்டுமல்லாமல் சித்திரை மாதம் தான் தமிழகத்தில் உள்ள பல பிரசிதிப்பெற்ற கோயில்களில் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்பு பெற்ற மாதத்தில் தான் குழந்தைகள் பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள். உண்மையில் நம் வீட்டு பெரியவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கான காரணம் விளங்கும்.

இந்து ஜோதிட சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்தது என்றாலும், அது அறிவியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. சூரியன் முதல் அனைத்து கோள்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சாஸ்திரம். எனவே நம் முன்னோர்கள் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஆகாது (Chithirai Month Baby Born in Tamil) என ஏன் கூறினார்கள் என்றால், சித்திரை மாதம் வெயிலை சாதாரணமாக இருக்க கூடிய மனிதர்களால் தாங்கி கொள்ள முடியாத போது ஒரு கர்ப்பிணியால் அந்த நேரத்தில் பிரசவிப்பது என்பது கட்டாயம் சிரமமான காரியமாகும். மேலும் அந்த நேரத்தில் பிறக்க கூடிய குழந்தையினாலும் சித்திரை மாத வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாது.

சித்திரை மாதத்தில் தான் அதிகமான வெயிலால் அம்மை போன்ற தொற்று ஏற்படக்கூடிய காலமாகும். அம்மை நோய் குடும்பத்தில் யாருக்காது வந்துவிட்டால் அது அனைவருக்கும் பரவிவிடும். இதனால் மருத்துவ செலவு, இழப்பு போன்றவை ஏற்படும் என்பதால் சித்திரையில் குழந்தை பிறக்க கூடாது என்று கூறி வந்தனர். ஆனால் காலப்போக்கில் இது ஆன்மீக ரீதியாக பார்க்கப்ட்டு, சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது, தாய் மாமனுக்கு ஆகாது என்று மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டம் போல் அந்த காலத்தில் மின்சார வசதி, மின் விசிறி போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்தது.

சித்திரையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம்?

சித்திரை மாதம் பொதுவாக சூரிய பகவானுக்கு உரிய மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சத்தில் இருப்பார். இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரிய பகவானின் முழு ஆசி கிட்டும் என்று நம்பப்படுகிறது. சூரிய பகவான் பொதுவாக அதிகார பதவியை கொடுப்பவர், எனவே இந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் அதிகார பதவியில் அமருவார்கள் என்பது ஐதீகம். இவர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும், அதிகாரத்துடனும் எப்போதும் இருப்பார்கள். சமூகத்தில் இவர்களுக்கு மரியாதை எப்போதும் இருக்கும்.

இந்த மாதத்தில் பெண் குழந்தை பிறந்தால் அவ்வளவு தான் என்று சொல்லும் அளவிற்கு இந்த மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் பரவாயில்லை ஆனால் பெண் குழந்தை பிறக்க கூடாது என்று ஏன் கூறுகிறார்கள். பெண் குழந்தை சித்திரையில் பிறந்தால் நேர்மையாக மற்றும் உண்மையாக இருப்பார். எதிர்த்து கேள்வி கேட்கும் குணம் படைத்தவராக இருப்பார். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. எனவே சித்திரையில் பிறந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள்.

மேலே குறிப்பிட்ட குறிப்புகள் பொதுவான கருத்துகளாகும். அது ஒரு தனிப்பட்ட நபரின் ஜாதக அமைப்பை பொறுத்து மாறுபடலாம்.

மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: தங்கம் தான் வாங்கணும்னு அவசியம் இல்லை..! செல்வம் பெருக இதை செய்தால் போதும்..!

Exit mobile version