Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் POTASSIUM சத்து குறைந்தால் என்னாகும்?? பொட்டாசியம் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்வு,உடல் களைப்பு ஏற்படும்.

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்தாக பொட்டாசியம் திகழ்கிறது.இந்த பொட்டாசியம் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக திகழ்கிறது.நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிர் அணுக்களிலும் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.

பொட்டாசியம் உடலில் இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள பொட்டாசியம் சத்து உதவுகிறது.உடலில் பொட்டாசியம் சத்து குறைந்தால் பல மாற்றங்கள் ஏற்படும்.

பொட்டாசியம் சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்:

1)தசை வலி அதிகமாதல்
2)உடல் பலவீனம்
3)உடல் சோர்வு பிரச்சனை
4)மலச்சிக்கல் பிரச்சனை
5)மன நலப் பிரச்சனை உண்டாதல்
6)மனச்சோர்வு
7)வயிறு உப்பசம்
8)வயிறு வலி
9)தசைப்பிடிப்பு

பொட்டாசியம் சத்து குறைபாட்டை சரி செய்யும் உணவுகள்:

1.வாழைப்பழம்
2.கீரை உணவுகள்
3.பேரிச்சம் பழம்
4.உலர் பழங்கள்
5.மாதுளை
6.பீன்ஸ்
7.உருளைக்கிழங்கு
8.பச்சை பட்டாணி
9.முட்டைகோஸ்
10.இளநீர்
11.வெண்ணெய் பழம்

தினமும் மாதுளை ஜூஸ் பருகி வந்தால் பொட்டாசியம் சத்து அதிகரிக்கும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பொட்டாசியம் சத்து அதிகரிக்கும்.பச்சை காய்கறிகள் மூலம் பொட்டாசியம் சத்து கிடைக்கும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் பொட்டாசியம் சத்து அதிகரிக்கும்.கால்சியம்,சோடியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சத்து கிடைக்கும்.
பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் உடல் நரம்புகளை வலிமைப்படுத்த உதவுகிறது.

வேர்க்கடலை,தேங்காய் நீர்,தக்காளி போன்றவற்றில் பொட்டாசியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Exit mobile version