என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம் செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்!
அரசாங்கம் சார்ந்த பல துறைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்கள் கேட்கும் வேலைகளை செய்து கொடுக்கின்றனர்.தேவையான ஆவணங்கள் இல்லாதபோதும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அரசு ஊழியர்கள் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சார் பதிவாளரான சுமதி தற்பொழுது சஸ்பென்ட் செய்துள்ளனர்.
இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களை மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக பலமுறை இவர் மேல் புகார் வந்துள்ளது.இந்த புகாராணது சென்னை பத்திரப்பதிவு ஐஜி சிவன் அருளிடம் முறையிட்டுள்ளனர்.மாதம் தோறும் போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவு நடந்து வந்துள்ளது.
மோரை என்ற ஊரில் வசிக்கும் ஒருவருக்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்தது தான் பூதாகரமாக வெடித்தது.இதனை அறிந்த பத்திரபதிவாளர் ஐஜி, சார் பதிவாளர் சுமதிக்கு தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஐஜி அளித்த உத்தரவை கூட அறியாமல் சார்பதிவாளர் சுமதி வழக்கம் போல் அலுவலகம் வந்துள்ளார்.அவர் அலுவலகம் வந்ததும் அங்குள்ள ஊழியர்கள் உங்களை சஸ்பென்ட் செய்ததாக கூறியுள்ளனர்.அதனை கேட்டதும் சார்பதிவாளர் சுமதி அதிர்ச்சியடைந்துள்ளார்.
சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் குலம்பியுள்ளார்.இவர் அங்கிருந்து செல்வதற்குள் பத்திரிக்கையாளர்கள் அவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டனர்.இவர் உடனடியாக அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்.