Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!

இங்க நான் சொல்றது தான் சட்டம்..அதிரடி காட்டும் எலான் மஸ்க்!! அதிர்ச்சியில் ‘எக்ஸ்’ பயனர்கள்!!

 

 

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார்.இதையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மஸ்க் சில மாதங்களிலேயே 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.

 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வசதியை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.இவரின் இந்த அறிவிப்பால் ட்விட்டர் பயனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்தனர்.இதையடுத்து ‘ப்ளூ டிக்’ பெற்ற பயனர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்று அறிவித்தார்.சமீபத்தில் ட்விட்டர் தளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றி அதிரடி காட்டினார்.

 

இந்நிலையில் அடுத்த அதிரடியை தொடங்கிய எலான் மஸ்க் ‘எக்ஸ்’ தளத்தில் பிளாக் வசதியை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.இவரின் இந்த அறிவிப்பு எக்ஸ் பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு காரணம் நமக்கு பிடிக்காதவர்களை தவிர்க்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பிளாக் செய்யும் வசதி இருந்தது.இதனால் ஏரளமான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் அந்த வசதி நீக்கப்பட்டால்

நாம் பிளாக் செய்த நபர்களின் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும்.அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது என்று தெரிவித்து எக்ஸ் பயனர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.

Exit mobile version