3 மாதம் ஆச்சு கேன்சரை ஒழிக்கும் ரூ100 மாத்திரை என்னாச்சு!! இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் குறித்து இயக்குனர் மோகன் கேள்வி!!
உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். இதன் உச்சகட்டமாக உயிரிழப்பையும் தடுக்க முடிவதில்லை. இதற்கென்று பல சிகிச்சை முறைகள் வந்தாலும் இதனை முழுமையாக குணப்படுத்தும் மருந்து மாத்திரைகள் இன்றளவும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இது குறித்த ஆராய்ச்சியானது தற்போது வரை அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் டாடா இன்ஸ்டியூட் நிறுவனமானது புற்றுநோயை செல்களை எதிர்க்கும் மாத்திரை குறித்து பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்து வந்துள்ளனர்.
இதன் வெற்றியாக புற்றுநோய் வந்தவருக்கு மீண்டும் அதன் தாக்கம் ஏற்படாமல் இருக்க கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூபாய் 100-க்கு மாத்திரை கிடைக்குமாறு கண்டுபிடித்துள்ளனர். இதற்குரிய ஆராய்ச்சியின் பொழுது எலியின் மீது பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. குறிப்பாக பிளட் கேன்சரில் அதில் உள்ள குரோமோட்டின் சிதரி நமது உடலில் புற்றுநோயின் தாக்கத்தை அதிகரிக்க கூடும். இதனை தடுக்க தற்பொழுது மாற்று மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு அதனை எலிகள் மீது சோதனை செய்யப்பட்டது.
அவ்வாறு சோதனை செய்ததில் அந்த குரோமோட்டின் உடையாமல் எந்த ஒரு பக்க விளைவுகளுமின்றி புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதாக டாடா ஆராய்ச்சி குழுவில் உள்ள டாக்டர் ராஜேந்திர பர்த்வே கூறியுள்ளார். இந்த மாத்திரை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாகவும் மேற்கொண்டு புற்றுநோய் பாதிக்காமலும் தடுக்க முடியும். இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்திடம் இது குறித்து ஒப்புதல் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து தற்பொழுது வரை எந்த தகவலும் வரவில்லை. மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இவ்வாறான மாத்திரைகள் மலிவு விலையில் கிடைப்பதென்பது மிகவும் அரிது. ஆனால் மக்கள் எதையெல்லாம் சாப்பிடக்கூடாதோ, அதற்கெல்லாம் முன்வந்து முன்னுரிமை வழங்குகிறது. இதனை கண்டித்து இயக்குனர் மோகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
மும்பையில் உள்ள Tata Institute, புற்று நோய் தீர்வாக பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த 100 ரூபாய் மாத்திரையை பற்றிய எந்த செய்தியும் வரவில்லை.. 3 மாதங்களாக பரிசோதனை செய்கிறதா இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை.. தகவல் தெரிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா??
https://x.com/mohandreamer/status/1791678407237079486
இவர் பதிவு செய்ததையடுத்து பலரும் இதுகுறித்து தனகளது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.