என்னது? டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனரா?
இந்திய அளவில், தமிழ் படங்கள் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள நடன இயக்குனர் பிருந்தா தற்போது திரைப்பட இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
நடன இயக்குனர் பிருந்தா முதன்முதலாக இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ‘ஹே சினாமிகா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிருந்தா இயக்கி உள்ள இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்த படத்தை வருகிற பிப்ரவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தை குறித்து படத்தின் இயக்குனர் பிருந்தா கூறுகையில், படத்தின் தலைப்பு வித்தியாசமாக உள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆம், படத்தின் தலைப்பு வித்தியாசமானதுதான். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில், மணிரத்னம் இயக்கி ‘ஓகே கண்மணி’ படத்தில் இடம்பெற்ற பாடல், ஒரு காரணம். கதைக்கு பொருந்துவது, இன்னொரு காரணம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், படத்தின் கதையை பற்றி கூறும்போது, மேற்கண்ட நடிகர்கள் இடையே உள்ள உறவுதான் கதையின் அடிநாதம். காஜல், அதிதி இருவருமே மிகச் சிறந்த நடிகைகள். அவர்களின் பங்களிப்பு, படத்திற்கு பக்கபலமாக இருந்தது என கூறியுள்ள அவர் நான் டைரக்டர் ஆகிவிட்டாலும், நடனத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன். நடனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், படங்களை இயக்குவேன் என கூறியுள்ளார்.