கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்!
மகா விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் கிருஷ்ணர். இவர் குறும்பு செய்வதில் கெட்டிக்காரர். இவர் என்னதான் குறும்பு செய்தாலும் இவரை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் பிறந்த தினத்தை தான் நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சொல்கிறோம். ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமியும் சேர்ந்து வரும் நாள் தான் நாம் கிருஷ்ணா ஜெயந்தி என்றும் கூறுகிறோம் . கம்சனின் தங்கைக்கு சிறையில் பிறந்த எட்டாவது குழந்தைதான் கிருஷ்ணன்.
தங்கைக்கு திருமணம் செய்யும் வரை நல்ல அண்ணனாக இருந்த கம்சன். தேவகிக்கு திருமணம் முடிந்தவுடன் ஒரு ஆசரீரியின் சத்தம் கேட்டு தங்கை தேவகியையும், தங்கை கணவரான வாசுதேவரையும் ஒரு சிறையில் அடைத்து கொடுமை செய்தான். அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மூலம் தான் அவனுக்கு முடிவு என்று அசரீரி சொன்னது தான் இதெற்கெல்லாம் காரணம்.
அதன் காரணமாக அவர்களை சிறையில் அடைத்து வைத்து கொடுமை செய்தான். மேலும் பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்று குவித்தான். எட்டாவது குழந்தையை கொள்ளும் போது தாய் பராசக்தி மீண்டும் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். எட்டாவது குழந்தை பிறக்கும்போது வாசுதேவர் அந்த குழந்தையை பத்திரமாக வாசுகி நாகம் குடையாக, யமுனை ஆற்றை பத்திரமாக கடந்து, கோகுலத்தில் கொண்டு போய் சேர்த்து விட்டு, யசோதாவின் வீட்டில் இருந்த பெண் குழந்தையை சிறைக்கு கொண்டு வந்தார்.
கிருஷ்ணனோ அங்கு யசோதா தாயாரிடம் சமத்து குழந்தையாக வளர்ந்து வந்தார். அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டது. கிருஷ்ணர் உயிரோடு இருப்பதை தெரிந்து கொண்ட கம்சன் அவரை அழிக்க பல்வேறு அசுரர்களை அனுப்பிக் கொண்டே இருந்தார். ஆனால் கிருஷ்ணர் குழந்தை வடிவில் இருந்தே அனைவரையும் சம்ஹாரம் செய்தார். பிறகு வளர்ந்து கம்சனையும் சம்ஹாரம் செய்தார்.
குழந்தை கிருஷ்ணருக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். கோகுலத்தில் கறவை மாடுகள் அதிகம் என்பதால் அனைவரது வீட்டிலும் பெண்கள் பானைகளில் வைத்திருப்பார்கள். கிருஷ்ணர் என்றாலே குறும்புதான். அவர்கள் அனைவரது வீட்டிலும் சென்று தனது சுட்டி தனத்தினால் வெண்ணை திருடி சாப்பிடுவது அவரது குறும்புத்தனம். அவருக்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று பதினாறு விதமான பட்சணங்கள், நைவேத்தியங்கள் வைத்து அவரது அருள் கிடைக்க நாம் பூஜை செய்யலாம்.
அனைவரும் இந்த தினத்தை கொண்டாடினாலும், குழந்தை வரம் வேண்டுவோர் சிரத்தை யாக பூஜை செய்யும் போது, அதற்கான பலன்களை அவர்கள் பெறலாம். கிருஷ்ணனுக்கு பால், வெண்ணை, நெய், இனிப்பு சீடை, கார சீடை, அவல், நீர் மோர், கை முறுக்கு, புளிப்பு முறுக்கு, ரிப்பன் முறுக்கு, பானகம், சுக்கு, பால் பாயசம், தட்டை, அவல் பொறி, தென் குழல், காரா சேவ் என பதினாறு வகைகளை வசதி உள்ளவர்கள் படைக்கலாம். வசதி இல்லாதவர்கள் ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம்.
சுட்டி கிருஷ்ணன் படம் வைத்து உங்களால் எது முடிகிறதோ அதை செய்து அவன் அருளை பூரணமாக பெறுங்கள். கிருஷ்ணர் பாதம் வீட்டில் போடுங்கள். இறைவன் எப்போதும் நாம் மனதார செய்யும் பூஜைகளை அவசியம் ஏற்பார். உலகத்திற்கு கீதா உபதேசம் செய்தவரும் கிருஷ்ணனே.