Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது  ராமருக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2008 ஆம் ஆண்டு ராமாயணம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராமாயணம் சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் குர்மீத் சவுத்ரி மற்றும் டெபினா பானர்ஜி.

இந்த நாடகத்தின் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தனர். பின்னர் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய அளவில் அவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அவர்களுடைய ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இத்தகவலை குர்மீத் தனது டுவிட்டர் பக்கத்தில், “என் மனைவி டெபினாவுக்கும் மற்றும் எனக்கும் இன்று COVID 19 பாசிட்டிவ் ஆகி உள்ளது. நாங்கள் நலமாக இருக்கிறோம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து நாங்கள் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளோம்.

எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உங்களை பார்த்து கொள்ளுங்கள். உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு எப்போதும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

அதிக கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் எவ்வாறு இவருக்குக் கொரோனா தொற்று  ஏற்பட்டது என்பது இதுவரை தெரியாத ஒன்றாகவே இருக்கிறதாம்.

 

Exit mobile version