Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குளவி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்..?? நல்லதா..?!கெட்டதா..?!

குளவி என்பது விஷத்தன்மை வாய்ந்த ஒரு பூச்சி. இந்தக் குளவி நம்மை கடித்தால் விஷத்தன்மை தான். ஆனால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்தப் பூச்சி நமது வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்? என்பது குறித்து தற்போது காண்போம்.

நமது இந்தியன் அஸ்ட்ராலஜி ப்ரொடக்ஷனில் இந்த குளவிக்கு என ஒரு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தக் குளவியின் பண்பு என்னவென்றால், தனக்கு தேவையான வீட்டினை கட்டுவதற்கு, மனிதனின் கால் படாத மண்ணை எடுத்து வந்து கட்டும் என கூறுகின்றனர்.

அதனுடைய கூட்டில் ஏராளமான மருத்துவ நலன்கள் நிறைந்து இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்தப் பூச்சி கட்டின கூட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த மண்ணை எடுத்து விபூதியில் கலந்து, தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குளவி ஒருவரது வீட்டிற்கு வருகிறது என்றால், அந்த வீட்டில் உள்ள செல்வம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும், கடன் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும். அதாவது பொருளாதாரம் சம்பந்தமான அனைத்து வித பிரச்சனைகளும் சரியாகும் என கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக அடகு வைத்திருக்கக் கூடிய நகையை மீட்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடம் கொடுத்த பணம் நமது கைக்கு வரும். இந்த குளவி ஒருவரது வீட்டிற்கு வரும் பொழுது மகாலட்சுமியின் அருளையும், ஆசியையும் கொடுப்பதாகவே கருதப்படுகிறது.

மேலும் இந்த குளவி நமது வீட்டிற்குள் இருக்கும் பொழுது நேர்மறையான ஆற்றல்களையே நமக்குத் தரும் எனவும் கூறப்படுகிறது. அதாவது அந்த வீட்டில் அதிகப்படியான சந்தோசத்தை தரக்கூடிய செய்திகள், சந்தோஷமான விஷயங்கள், சிரிப்பு சத்தங்கள் இது போன்றவைகள் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் இருக்கக்கூடிய வீட்டில், இந்த குளவி வந்து கூடு கட்டுகிறது என்றால், அந்த வீட்டில் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கப் போவதாக அர்த்தம்.
மேலும் இந்த குளவி நமது வீட்டிற்குள் வருவதன் மூலம், நமது வீட்டில் அதிகப்படியான சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இவை அனைத்தும் மக்களிடையே நிலவக்கூடிய சில நம்பிக்கைகளாகவும் இது கூறப்படுகிறது. சிலர் இதை மூடநம்பிக்கை எனக் கூறினாலும், பெரும்பாலான மக்களிடையே இது மிகுந்த ஆழமான மற்றும் நல்ல நம்பிக்கையாகவே திகழ்ந்து வருகிறது.

ஒரு வீட்டில் இந்த குளவி செம்மண்னை பயன்படுத்தி கூடு கட்டினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மற்ற மண்களை பயன்படுத்தி கூடு கட்டினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் நமது முன்னோர்கள் கூறுகின்றனர்.

இந்த குளவி வீட்டிற்குள் வருவதால் பொருளாதார ரீதியாகவும், குடும்ப மகிழ்ச்சியை ரீதியாகவும் பல நன்மைகள் ஏற்பட்டாலும் கூட, இது ஒரு விஷத் தன்மை வாய்ந்த பூச்சி. எனவே இந்த பூச்சிகளிடம் இருந்து குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளவி ஒரு வீட்டிற்குள் வருகிறது என்றால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்கிறது எனவும், அந்த குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனவும் புரிந்து கொள்ளலாம்.

Exit mobile version