தொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!..
சேலம் அஸ்தம்பட்டி போலீசார் மறவநேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அரசு பள்ளி முன்பு சந்தேகக்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்கள். ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த நடராஜன் வயது 57, முரளி கிருஷ்ணன் வயது 26 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சேலம் புலிக்குத்தி பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்ற மணிகண்டன் வயது 32 என்பவரை செவ்வாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் அய்யந்திரு மாளிகை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
விசாரணையில் அந்த நபர் இன்ஜினியரிங் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் சௌந்தரராஜன் வயது 21 என்பது தெரியவந்தது. உடனே போலீசார் சௌந்தரராஜனை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சேலம் நெத்திமேடு மணியனூர் பகுதியில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது தாத்தக்காபட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியில் கஞ்சா விற்ற பிச்சா காந்தி என்ற கார்த்திக் வயது 24 மணியனூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சேற்று என்கின்ற லட்சுமணன் வயது 38 ஆகிய இரு பேர் கஞ்சா விற்ற தகவல் தெரியவந்தது.
உடனே போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கிலோ மற்றும் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கல்லூரி மாணவன் கஞ்ச விற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.