Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

#image_title

150 படங்களுக்கும் மேல் நடிச்சும் என்ன பயன்!!? தேசிய விருது வாங்க முடியவில்லை என்று கதறும் 6 நடிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கும் மேல் நடித்தும் தேசிய விருது வாங்காத 6 முன்னணி நடிகர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் தற்பொழுதைய காலத்தில் பல நடிகர்கள் வளர்ந்து வருகிறார்கள். பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்தாலும் தேசிய விருது என்பது எட்டாக் காலியாக இருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் வெறும் குறைவான திரைப்படங்களில் நடித்து தேசிய விருதுகளை அள்ளி சென்று விடுகிறார்கள்.

அவ்வாறு 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சில நடிகர்களுக்கு மட்டும் தற்பொழுது வரை தேசிய விருது கிடைக்காமலேயே இருக்கின்றது. அந்த வரிசையில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அர்ஜூன், நடிகர் சரத்குமார், நடிகர் சத்யராஜ், நடிகர் பிரபு ஆகியோர் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தும் இதுவரை ஒரு படத்திற்காக கூட தேசிய விருது வாங்கவில்லை என்பது வருத்தத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன்…

நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 288 திரைப்படங்கள் நடித்துள்ளார். இதில் 250 படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.

இவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்பும், தனித்துவமான குரல் வளமும் இன்றைய நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. இவ்வாறு பல பகுதிகளுக்கு சொந்தக்காரரான நடிகர் சிவாஜி கணேசன். அவர்களுக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியர், தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும் தேசிய விருது ஒரு திரைப்படத்திற்காகவும் இவருக்கு கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு…

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் மகன் தான் நடிகர் பிரபு ஆவார். என்னதான் பிரபலமான நடிகரின் மகன் என்று சினிமாவில் நுழைந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் அளவிற்கு சினிமாவில் உயரத்தை தவற விட்டாலும் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து அதில் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பல திரைப்படங்களில் பல நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கும் தேசிய விருது கிடைக்கவில்லை.

நடிகர் ரஜினிகாந்த்…

சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 47 வருட சினிமா பயணத்தில் பல திரைப்படங்களில் பல விதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இன்னும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இதுவரை பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகிப் பால்கே போன்ற உயரிய விருதைகளை வென்றுள்ளார். ஆனால் இது வரை தேசிய விருது மட்டும் இவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சத்யராஜ்…

ஹீரோவாகவும் சரி வில்லனாகவும் சரி சிறப்பாக நடிக்கும் நடிகர்களுள் மிகவும் கவனிக்கத்தக்க நடிகர் யார் என்று கேட்டால் அது சத்யராஜ் அவர்களை செல்லலாம். பக்கமும் நய்யாண்டியும் கலந்த பேச்சை கேட்பதற்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பாகுபாடு திரைப்படத்திற்கு பிறகு இவரை கட்டப்பா என்ற பெயரிலும்ஜரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தேசிய விருது என்பது கைக்கு எட்டாத கனியாக இருக்கின்றது.

நடிகர் அர்ஜூன்…

நடிகர் அரஜூன் ஆக்சன் கிங் என்றும் பலராலும் அழைக்கப்பட்டு வருகின்றார். 1990களில் டாப் நடிகராக அர்ஜூன் அவரீகள் இருந்துள்ளார். இவர் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார். இவரும் கிட்டத்தட்ட ஒரு 150 படங்களுக்கும் மேல் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் தேசிய விருது இன்னும் இவருக்கு கிடைக்காமல் இருக்கின்றது.

நடிகர் சரத்குமார்…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், ஷைனிங் ஸ்டார், பவர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று பல வித நடிகர்கள் இருந்தாலும் நாட்டாமை கதாப்பாத்திரத்தில் நடித்து இன்றளவும் பேசப்படுகிற ஒரே ஆள் அது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் தான். இவருடைய நாட்டாமை திரைப்படம் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.

இவரும் தற்பொழுது வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். அப்பா, அண்ணன், தம்பி, நண்பன் என்று என்ன கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நடிகர் சரத்குமார் அவர்கள் கவனம் பெருபவராக இருக்கின்றார். இவரும் பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கும் தேசிய விருது என்பது கிடைத்தது இல்லை.

Exit mobile version