Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?

#image_title

1996-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த சமயம் அது.

 

ஆச்சி மனோரமாவோ அதிமுகவிற்கு ஆதரவளித்தார். ஆச்சி மனோரமாவும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆச்சி மனோரமா அதிமுக கட்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் திமுகவுடன் இணைந்து திமுகவில் சேர்ந்தார்.

 

தேர்தல் பிரசாரப் பேச்சுக்களின் போது ரஜினியை குடிகாரன், பைத்தியக்காரன் என்றும், ரஜினிகாந்தின் நாகரீகத்தைப் பின்பற்றி தமிழ் இளைஞர்களைக் கெடுக்கும் தமிழன் அல்லாத நடிகன் என்றும் ரஜினிக்கு எதிராகப் பேசியவர் நடிகை மனோரமா. மனோரமா தனது தேர்தல் பிரசார உரைகளில் ரஜினிகாந்தை நேரடியாக தாக்கி பேசினார்.

 

ரஜினிகாந்த் மனோரமாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 

அப்பொழுது ரஜினிகாந்த் கூட்டணி வைத்திருந்த திமுக கட்சி வெற்றி பெற்றது. ஆச்சி மனோரமா அவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்கப்படாமல் சினிமா துறையில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். அரசியல் வாழ்க்கையிலும் அவர் ஒதுக்கப்பட்டார்.

 

அதன் பிறகு ரஜினியை வைத்து தயாரித்த அனைத்து பட தயாரிப்பாளர்களும் ஆச்சி மனோரமாவை புக் செய்ய மறுத்தார்கள். ஏனென்றால் அப்பொழுது நடந்த விமர்சனங்களை குறித்து ரஜினிக்கு கோபம் வந்து விடுமோ என்று எண்ணி மனோரமாவை புக் செய்ய மறுத்தார்கள்.

 

அதன் பிறகு இதை எப்படியோ தெரிந்து கொண்டு ரஜினிகாந்த் அவர்கள், மனோரம்மாவை அருணாச்சலம் படத்தில் நடிக்க புக் செய்ய சொன்னார்.

 

அங்கு செட்டில் ரஜினிகாந்த் அவரிடம் பேச தயங்கியுள்ளார் ஆட்சி மனோரமா. ஆனால் ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக அவருடன் பேச தொடங்கியுள்ளார்.

 

அதன்பின் ஒரு மேடையில் பேசிய பொழுது ஆச்சி மனோரமாவை ரஜினி காந்த் அவர்கள் புகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. பில்லா படத்தின் பொழுது ரஜினிகாந்த்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், அப்பொழுது சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, மக்களில் ஒருவர் பைத்தியம் என்று ரஜினிகாந்தை பேசியுள்ளார். மனோரமா அவர் பைத்தியம் கிடையாது. திட்டியவன் இங்கிருந்து சென்றால் தான் ஷூட்டிங் நடக்கும் என, அவருடன் சண்டைக்கு போய்விட்டாராம் . அன்றிலிருந்து மனோரமா மீது ரஜினிக்கு பாசம் அதிகமாக இருந்திருக்கிறது. மனோரமா அவர்கள் அவரை நன்றாக பார்த்துக் கொண்டதாகவும் ரஜினி மேடையில் சொல்லியிருக்கிறார். இதனால் மிகவும் கண் கலங்கிய ஆச்சி மனோரமா மற்றும் ரஜினிகாந்தின் சண்டை முடிவு பெற்றது.

Exit mobile version