Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் மறுபடியும் அதிகரிக்க தொடங்கியது நோய்த்தொற்றுப்பரவல் ஏற்பட உண்மைக் காரணம் இதுதான்!

நோய்த்தொற்று பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலக நாடுகளிடையே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு உலக நாடுகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அதனால் இந்தியாவில் நிர்வாக நோய்த்தொற்று பரவலாக குறைந்து கொண்டே செல்கிறது. ஆனாலும் ஒரு சில மாநிலங்களில் நோய் தொற்று பரவும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் பொதுமக்களிடையே அச்சம் தோன்றியிருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தைப் பொருத்தவரையில் மெதுவாக நோய்த்தொற்று பரவல் குறைந்து விட்டது. ஆனால் வட மாநிலங்களில் இந்த நோய்த் தொற்று பரவல் தற்சமயம் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், நாட்டில் மறுபடியும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்த மாநிலங்களில் தலைநகர் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கே நேற்று முன்தினம் ஒரேநாளில் 1009 பேர் புதிதாக இந்த நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இது முந்தைய தினத்தை விட 60% அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது மாநில அரசுக்கும், சுகாதார துறையினருக்கும், கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் புதிதாக நோய் தொற்றுக்குள்ளானவர்களிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் பி.ஏ.2.12.1 வகை நோய் தொற்றும் சிலரிடம் இடம்பெற்றிருப்பதாக இந்திய நோய்த்தொற்று மரபியல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனாலும் இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதியாக தெரிவிக்கவில்லை. அதே சமயம் பி.ஏ.2.12.1 மற்றும் பி.ஏ.2.10 உள்ளிட்ட இரண்டு துணை மாறுபாடுகள் மட்டும் 60 சதவீதத்திற்கும் அதிகமான மாதிரிகளில் கண்டறிய பெற்றிருப்பதாகவும், இவை வேகமாக பரவுவது தெரிய வந்திருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த புதிய வகை மாறுபாடானது டெல்லியில் மட்டுமல்லாமல் தலை நகரை ஒட்டியுள்ள உத்தரபிரதேசம், அரியானா, உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தலைநகர் டெல்லியில் நோய்த்தொற்று அதிகரிப்பு தொடர்பாக மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவிக்கும்போது,ஒமைக்ரானின் இனப்பெருக்க எண் 10 என உள்ளது. இது அதிகம் பரவக்கூடிய அளவை கொண்டிருக்கிறது. ஆகவே அதன் வழித்தோன்றல்களும், துணை மாறுபாடுகளும், அதே வேகத்தை கொண்டிருக்கும் என தெரிவித்தார்.

கைகள் தூய்மையாக இல்லாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, கவசம் அணியாமலிருப்பது, உள்ளிட்டவற்றால் இது பரவும் என்று தெரிவித்த அவர், ஆகவே இவற்றை கடை பிடித்தால் நோய்த்தொற்று பரவலை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

Exit mobile version