Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னது ‘ராஜா ராணி 2’ ஹிந்தி சீரியலின்  ரீமேக்கா ?

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஆலியா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 என்ற சீரியல் உருவாக இருக்கிறது. இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்து நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது.

ஹீரோ சமையல்காரன், படிக்காதவன். ஹீரோயின் போலீஸ் ஆக ஆசைப்படும் பெண்மணி. இந்த ப்ரோமோ வெளியானதும்  இது ஹிந்தி சீரியல்ஆன ‘தியா அர்  பாடி ஹம்’ என்ற சீரியலின் கதை என்று பலர் கூறி வருகின்றனர்.

கொரோனா முடிந்த பிறகு விஜய் டிவியில் உள்ள எந்த சீரியலும் அந்தளவு டிஆர்பி ரேட்டிங்கை தரவில்லை. எனவே விஜய் டிவி புது கதைகளத்தை  அறிமுகப்படுத்தியது. புது கதைக்களங்கள் சுவாரசியமாக இல்லாத காரணத்தினால் விஜய் டிவி அவ்வளவாக மக்களால் ஈர்க்கப்படவில்லை.  இதனால்  விஜய் டிவி புது நாடகங்களை களமிறக்க உள்ளது. 

‘தியா அர்  பாடி ஹம்’ சீரியலை ஏற்கனவே என் கணவன் என் தோழன் என்ற தலைப்பில் விஜய் டிவி தமிழில் டப் செய்து ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ராஜா ராணி 2 எந்த அளவு வெற்றியைப் பெறும் என்பது இனிமேல்தான் தெரியும். மேலும் ஆலியா மானசா சஞ்சீவ் நடித்த ராஜாராணி சீரியல் இந்த சேனலில் மிகப்பெரிய ஹிட் அடித்து டிஆர்பியை எகிற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version