மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை!
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது தான் ஜல் ஜீவன் திட்டம். இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் கிராமபுறங்களில் உள்ள மக்களை பயனடைய செய்ய முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற இருப்பவர்கள் அந்தந்த கிராம ஊராட்சியின் படி 1200 இல் இருந்து 1300 வரை வசூல் செய்யப்படுகிறது.
இந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டு அந்தந்த கிராம ஊராட்சியினர் மக்களுக்கு தேவையான குடிநீர் இணைப்பை வழங்கி வருகின்றனர். தற்பொழுது இத்திட்டம் செயல்படுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர்.