Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன பொசுக்குனு கெட்டவார்த்த பேசிட்டிங்க தளபதி!!! டிரெய்லர் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

#image_title

என்ன பொசுக்குனு கெட்டவார்த்த பேசிட்டிங்க தளபதி!!! டிரெய்லர் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!!

அனைவரும் எதிர்பார்த்தபடி லியோ டிரெய்லர் வெளியான நிலையில் டிரெய்லர் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போல அமைந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்த தியேட்டரில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருக்கும் காட்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் சென்சார் போர்ட் சர்டிபிகேட்டில் நிறைய கெட்ட வார்த்தைகளை மியூட் செய்திருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் காட்சியிலும் நடிகர் விஜய் அவர்கள் கெட்டவார்த்தை பேசுவது போல ஒரு காட்சி அமைந்துள்ளது.

தற்பொழுது வெளியாகி இருக்கும் டிரெய்லர் காட்சியில் இயக்குநர் கலாம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், திரிஷா அவர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

டிரெய்லரில் நடிகர் விஜய் அவர்களும் திரிஷா அவர்களும் கணவன் மனைவி பலவும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் காவல் துறை அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் கைதியாகவும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் வில்லன்களாகவும், சாண்டி மாஸ்டர் சைகோ மனிதராகவும் காட்டப்பட்டுள்ளனர்.

தற்பொழுது வெளியாகி உள்ள டிரெய்லரை வைத்து ரசிகர்கள் பலரும் எல்.சி.யூ கனெக்ட் இருக்கின்றதா என்பதை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த டிரெய்லர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Exit mobile version