Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் அவர்கள் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் இடம் வீடியோகால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

தமிழ் திரையுலகில் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன். இவரது நடிப்பும் இவரது பேச்சுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று கூறலாம். இலக்கண நடையில் இவர் பேசும் பேச்சுக்கள் அனைவரையும் அவர் பக்கம் இழுக்கும் என்றே சொல்லலாம்.

தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தமிழக சட்டமன்ற தேர்தலில் கலந்துகொண்டு தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் கமலின் தீவிரமான ரசிகர் ஒருவர் மூளை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் கமலைப் பார்க்க ஆசைப் பட்டது கமலுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் தனது ரசிகர் மூளை புற்று நோயுடன் போராடி வந்த சாகேத் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக கமல் அவர்கள் பேசி உள்ளார்.
அப்போது சாகேத் தனது மகனுக்கு விருமாண்டி என பெயரிட்டது கூட சொன்னதும் கமல் நெகிழ்ந்து அவரை பாராட்டுகிறார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி நடிகர் கமலஹாசனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது ரசிகர்க்கு நேரம் ஒதுக்கிய கமலஹாசனின் பண்பை அனைவரும் புகழ்ந்து பேசுகின்றனர்.

Exit mobile version