அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றது அதோடு பல இடங்களில் மரங்களும் சாய்ந்து விட்டன இதன் காரணமாக போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டார் அதன்பின்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தகால புயல் மற்றும் டிசம்பர் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து எந்தவித பாடத்தையும் அதிமுக அரசு கற்க வில்லை என மக்கள் ஒரே குரலில் தெறிவிப்பதை கேட்க முடிகின்றது மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்னும் இந்த பத்து வருட கால ஆட்சியில் அதே நிலையில் தான் இருக்கின்றது. குடிசை மாற்று வாரிய வீடுகள் இருக்கின்ற பகுதிகள் மட்டுமல்லாமல் தாழ்வான பகுதிகள் முக்கிய சாலைகள் அனைத்துமே தண்ணீரில் மூடி இருக்கின்றன இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை என மாபெரும் பொய்யை நா கூசாமல் முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்து வருவது வேதனையாக இருக்கின்றது.
கஜா புயல் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்ளாமல் விட்டது போல இந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் நோக்கத்தில் அதிமுக அரசு செயல்படக்கூடாது பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக நிவாரணத் தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.
இந்த நிலையிலே கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்பு இந்த அறிக்கைக்கு பதில் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ன பாடத்தை கற்க வேண்டும் புயலை எப்படி எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு வெளிக் கொண்டு வருவது என்று அரசு மிகச் சரியான முறையில் துரிதமான நடவடிக்கை எடுத்திருக்கின்றது இதன் காரணமாக உயிர் சேதம் குறைக்கப்பட்டுள்ளது பொருட்சேதமும் ஏற்படவில்லை அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் எடுத்த நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய பாதிப்பை தவிர்த்து இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.