தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிடுவது போல் அமைச்சர் வேலுமணி செய்த காரியம்!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெண்ணின் பெருமை போற்றும் பெருவிழா என்ற பொதுக்கூட்டம் நடந்தது.அதில் அதிமுகவினர் சார்பில் சிங்காநல்லூர் பகுதி சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்குவதாக கூறப்பட்டது.இதனையடுத்து ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விழாவில் கலந்துகொள்ள காலதாமதமாக வந்ததார்.இவர் காலதாமதமாக வந்த காரணத்தினால் கூட்டத்தில் இருந்த மக்கள் கலைந்து சென்றனர்.அப்போது அங்கிருந்த ஒரு தினசரி பத்திரிக்கையாளர் கலைந்த மக்களின் காலி நாற்காலிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.காலி நாற்காலிகளை படம் பிடித்த பத்தரிகையாளரை அங்குள்ள அதிமுகவினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதைனையடுத்து விழாவிற்கு தாமதமாக வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கப்பட்ட நிருபரிடம் மேடையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.கழக உறுப்பினர்கள் இதுபோன்று கடுமையாக நடந்துகொள்வது மிகவும் தவறானது எனக் கூறினார்.இது பார்பதற்கு தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையும் கில்லிவிடுவது போல,பத்திரிக்கையாளரை தாக்கியது அனைத்து பத்திரிக்கையிலும் வர வேண்டும் எனக் கூறியுனார்.
அப்போதுதான் லட்சகணக்கான மக்களையும் சென்றடையும் என்றார்.கோவை மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் இதுபோன்ற கேமரா பறிப்பு சம்பவங்கள் அதிமுகவிடம் நடப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.