Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

#image_title

சிறுமியை கடத்தி முன்று குழந்தைகளின் தந்தை செய்த காரியம்!! அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி என்ற பகுதியை சேர்ந்த 14  வயதுடைய சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  8 ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி திடிரென சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

இதனால் சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கன்னியாகுமரி மாவட்டத்தின்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினார்கள். விசாரணை மேற்கொண்டதில் சிறுமி கடத்தப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் பக்கத்து வீட்டில் இருந்த 3 குழந்தைகளின் தந்தையும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.மேலும்  சந்தேகம் அடைந்த  போலீசார் சிறுமியை அந்த நபர் கடத்தி இருக்கலாம் என்று கருதினார்கள்.

பின்னர் அந்த நபருடைய செல்போன் எண்ணை வைத்து  விசாரணை மேற்கொண்டதில்  அவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரிய வந்தது.

சந்தேகத்தின் பேரில் அங்கு  விரைந்து சென்ற போலீசார் சிறுமியுடன் 3 குழந்தைகளின் தந்தை இருப்பதையறிந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர் .

Exit mobile version