Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

#image_title

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் காதல் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த காதலி(பள்ளி மாணவி) தன் காதலனுக்காக பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 16 வயது நிரம்பிய மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தேனி மாவட்டம் கொத்தபட்டியை சேர்ந்தவர். அந்த மாணவி நேற்று(செப்டம்பர்21) மதியம் உணவு இடைவெளியில் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து திடீரென்று கீழே குதித்தார். கீழே குதித்ததில் மரக்கிளையில் சிக்கிய மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள இருந்த மாணவிகள் அனைவரும் இது குறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்து ஆம்புலன்ஸ் வந்த பிறகு மாணவியை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது காவல் துறையினர் “மூன்றாவது மாடியில் இருந்து குதித்த இந்த மாணவி 10ம் வகுப்பு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தார். தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு இங்கு படித்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை தன்னுடன் படித்து வந்த மாணவர் ஒருவரை இவர் காதலித்துள்ளார். அந்த மாணவனும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் அந்த மாணவன் சிக்கியது அடுத்து அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் காதலன் விபத்தில் சிக்கியது அறிந்த மாணவி மனமுடைந்து மாணவி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்பொழுது இரண்டு பேருமே தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்தனர்.

காதலன் விபத்தில் சிக்கியதற்காக தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version