Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதற்கும் வரி விதிப்பா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த 2017ம் வருடம் ஜூலை மாதம் முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. அன்று முதல் நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அரிசி மற்றும் தானியங்களுக்கு 5️ சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை தற்போது மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இதனை கண்டிக்கும் விதமாக அரிசி ஆலைகள், அரிசி மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போராட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலை உரிமையாளர்கள் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சமையலென மாநில தலைவர் பி எஸ் துளசிலிங்கம் தெரிவித்ததாவது, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகரில் சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதிப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் பதிவு செய்யப்பட்ட பிராண்டுக்கு மட்டுமே 5️ சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், தற்பொழுது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரசுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டிருப்பதால் அரிசியின் விலை நிலவுக்கு 3️ ரூபாய் முதல் 4️ ரூபாய் வரையில் உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 25 கிலோ கொண்ட அரிசி இனி 1,050 ரூபாயாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றமானது அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு இதுவரையில் அரிசிக்கு எந்த விதமான வரி விதிப்பும் இல்லாததால் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில், அரிசி மூட்டைகள் எந்த விதமான தங்கு தடையும் இல்லாமல் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனாலும் ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது பல தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கின்றன.

எந்த அரசும் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு இதுவரையில் வரி விதிப்பு செய்ததில்லை ஆகவே பொது மக்களை பாதிக்கும் இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை அரிசி ஆலைகள், அரிசி மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த கடை எடுப்புக்கு மற்ற அனைத்து வணிகர் சங்கங்களிடமும் ஆதரவு கோரப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version