கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா?

0
79
#image_title

கவிஞர் வாலி சொன்னது அப்படியே பாரதிராஜா வாழ்க்கையில் பலித்தது – என்ன நடந்ததுன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவரை இவரது ரசிகர்கள் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார்.

உணர்வுபூர்வமான கிராமத்தின் காதலை, நிகழ்வுகளை நம் முன் காட்டியவர். இவரது படைப்பில் ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ உட்பட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர், நடிகைகளை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார. இந்தியாவின் உயரிய விருதுதான ‘பத்ம ஸ்ரீ’, ‘தேசிய விருதுகள்’, ‘தமிழ் நாடு மாநில விருதுகள்”, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ போன்ற பல விருதுகளை குவித்துள்ளார்.

தற்போது 80 வயதைக் கடந்தும், சினிமா நிகழ்ச்சிகளிலும், தமிழ் படத்திலும் ஆக்டிவாக நடித்து வருகிறார்.

ஒரு தடவை பாடலாசிரியர் வாலி ஒரு நிகழ்ச்சி விழாவில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘சில விஷயங்கள் நான் சொன்னால் அப்படியே பலித்துவிடும். ஒருமுறை பாரதிராஜா என்னிடம் வசன பேப்பரை வாங்குவதற்காக என் வீட்டிற்கு வந்தார். அவருக்கு நான் ஒரு கவிதை புத்தகம் கொடுத்தேன். இன்னும் ஒரு வருடத்தில் நீ இயக்குனராகி விடுவாய் என்று சொன்னேன். அடுத்த வருடத்திலேயே அவர் ‘பதினாறு வயதினிலே’ படத்திற்கு இயக்குநராகிவிட்டார் என்று மனம் திறந்து பேசினார்.