Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

what-the-student-did-with-the-online-game-police-registered-a-case

ஆன்லைன் கேம்மால் மாணவன் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய மாணவர். இவர்  தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். இந்நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர்.

அதனால் மனமுடைந்த நிலையில் அந்த மாணவன் காணப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை பெற்றோர் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version