பள்ளி விடுமுறை வகுப்பை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் செய்த காரியம்!! கட் அடித்து சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!
பள்ளியில் வகுப்பை புறக்கணித்துவிட்டு சென்ற மூன்று மாணவர்கள் சோகமான முடிவுக்கு ஆளாகி உள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தில் துர்காப்பூர் சென்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தை ஒட்டி தாமோதர் என்ற நதி ஓடுகிறது. இந்த ஆற்றில் அந்த கிராமத்தினை சேர்ந்த அனைத்து மக்களும் தங்கள் நீர்தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.மேலும் அந்த கிராம மக்கள் அதில் குளிப்பது வழக்கம். அங்கு தடுப்பனையும் உள்ளதால் சிறுவர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த சூழ்நிலையில் துர்காபூர் கிராமத்தை ஒட்டி உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த 8 மாணவர்கள் பள்ளி வகுப்பினை புறக்கணித்துவிட்டு தாமோதர் ஆற்றில் குளிக்க சென்றதாக தெரிகிறது. ஆற்றில் குளித்து சந்தோஷமாக மகிழ்ந்து விளையாடியவர்களுக்கு அடுத்து நிகழ இருக்கும் விபரீதம் புரியவில்லை.
ஆற்றில் குளித்து குதூகலமாக ஆட்டம் போட்ட மாணவர்களில் ஒரு சிறுவன் விபரீதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு அதிகம் ஆழம் என்பதால் அவன் தத்தளித்துள்ளான். இதனால் மேலும் இரண்டு மாணவர்கள் அவனைக் காப்பாற்றுவதற்காக அதே ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர் அப்போது அந்த பகுதியில் மூவரும் மாட்டி அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மற்ற மாணவர்கள் கிராமத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மாலை நேரத்தில் மூன்று மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வகுப்பை கட்டடித்துச் சென்ற மூன்று மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீத முடிவு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.