Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

#image_title

கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

மாணவிகளை தவறாக பேசியதால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பான இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளை முதல்வர் அநாகரிமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள் நண்பனின் சகோதரனின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளனர்.

திருமணத்திற்கு சென்று விட்டு இரண்டு நாள் விடுமுறை கழித்து மாணவ மாணவியர்கள் கல்லூரி வந்துள்ளனர். அப்போது மாணவிகளை கல்லூரி முதல்வர் சந்திரா மிகவும் கேவலமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சந்திராவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் நோட்டீஸ் அடித்து சுவர்களில் ஒட்டினர். அதில் கலசலிங்க கல்லூரி நிர்வாகமே மாணவிகளை அவதூறாக தொடர்ந்து பேசி வரும் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடு என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

மாணவிகளை முதல்வர் தவறாக பேசியதும் அதற்காக மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததும் விருதுநகர் மாவட்டத்தை பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Exit mobile version