Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம்

BJP Person Misbehave with School Child

BJP Person Misbehave with School Child

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  இளைஞர் செய்த காரியம்

கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை தாழ்தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் பன்னூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது அங்குள்ள கல்லக்கொளடா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு சேகர் அடிக்கடி சென்று வந்தபோது அந்த கடையில் நின்ற 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த சிறுமிக்கு சேகர் செல்போன் வாங்கி கொடுத்து அதன் மூலம் இருவரும் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேகர் சொந்த வேலை காரணமாக தனது சொந்த ஊரான தாழ்தேவனூருக்கு வந்தார். இவரது அழைப்பின் பேரில் அந்த சிறுமியும், அவளது 12 வயது தங்கையும் கடந்த 1-ந் தேதி கல்லக்கொளடாவில் இருந்து பஸ் ஏறி கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். இவர்களை சேகர் தனது வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.

பின்னர் 3-ந் தேதி 17 வயது சிறுமியை மேல்பரிகத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட சேகர் அவளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Exit mobile version