Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம் வீட்டில் இருக்கும் உடைந்து போன மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்வது..?!

விளக்கு என்றாலே ஒளியை தரக்கூடிய ஒரு பொருள் என்று நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய விளக்கு எப்பொழுதும் மங்களகரமாகவே இருக்க வேண்டும். நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கு என்பது ஒடுங்கி இல்லாமலும், நசுங்கி இல்லாமலும்,ஆடிக்கொண்டே இருக்காமலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கக்கூடிய விளக்குகளை பயன்படுத்தவும் கூடாது.

விளக்கானது ஏதேனும் ஒரு நாள் கீழே விழுந்து அதில் இருக்கக்கூடிய சில பகுதிகள் உடைந்து இருந்தாலோ அல்லது பரம்பரை பரம்பரையாக ஒரு விளக்கை பயன்படுத்தி வருகிறோம் என்று கூறக்கூடிய விளக்கு உடைந்து இருந்தாலும் அவ்வாறு இருக்கக்கூடிய விளக்குகளையும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு இருக்கக்கூடிய விளக்குகளை கடையில் கொடுத்து விட்டு வேறு விளக்கினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் வெள்ளி விளக்குகளையும் கடையில் கொடுத்து மாற்றி விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விளக்கானது மிகவும் பழையதாக ஆகிவிட்டது என்று நினைப்பவர்கள் அந்த விளக்கினை அப்படியே எடுத்து வீட்டில் வைக்கக் கூடாது. நாம் பயன்படுத்தாமல் ஒரு விளக்கினை அழகுக்காக வைத்திருக்கிறோம் என்றால் அந்த விளக்கினை அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த நிறை விளக்கினை பயன்படுத்தாமல் வீட்டில் வைக்கக் கூடாது. அந்த விளக்குகளை கடையில் கொடுத்து விட்டு வேறு விளக்கினை வாங்கி பயன்படுத்த வேண்டும். அம்மா அல்லது நமது நெருங்கிய உறவுகளுள் யாரேனும் ஒருவர், அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு விளக்கினை நமக்கு ஞாபகார்த்தமாக கொடுத்திருந்தாலும், அதனை அவர்களின் ஞாபகமாக நமது வீட்டில் அப்படியே வைத்திருக்கக் கூடாது.

ஏனென்றால் அந்த விளக்கானது அவர்கள் தினமும் ஏற்றி வழிபட்டுக் கொண்டிருந்த ஒரு விளக்கு. எனவே அந்த விளக்கினை பயன்படுத்தாமல் நமது வீடுகளில் வைத்திருக்கக் கூடாது. அவர்களின் ஞாபகமாகவே அந்த விளக்கினை கடையில் கொடுத்துவிட்டு வேறு ஒரு புதிய விளக்கினை வாங்கி வைத்துக் கொள்ளலாம். விளக்கு என்பது பார்க்கும் பொழுதே மங்களகரமானதாக இருக்க வேண்டும்.

எனவே விளக்கினை மிகவும் சுத்தமாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவதும் முக்கியம். அந்த விளக்கில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை அப்படியே எடுத்து நமது வீட்டில் வைக்காமல், அதனை கடையில் கொடுத்து விட்டு வேறு ஒரு புதிய விளக்கினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Exit mobile version