Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணத்திற்கு என்ன காரணம்? குடும்பத்தினரின் பரபரப்பு பேட்டி!

விஜய் டிவியின் காமெடி நடிகராக புகழ்பெற்ற நடிகர் வடிவேல் பாலாஜி கலக்கப்போவது யாரு? மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளின் மூலமாக தனது திறமையை காட்டியவர்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு திடீரென்று மயக்கம்  ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலையை பரிசோதித்த பிறகு அவரது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது தெரிய  தெரியவந்த நிலையில் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இன்று மீண்டும் அவர் வீட்டில் மயங்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது  உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் இவ்வளவு பேரும் புகழும் சம்பாதித்து நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென்று இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றதால் அவருடைய குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய சிறப்பாக உள்ளது.

 

Exit mobile version