“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு தடை விதிக்கக் காரணம் என்ன? அரசுகளுக்கு அதிரடி நோட்டீஸ்!!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் தடை விதித்துள்ளது, இந்த தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது கூறிய நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது.
அனைத்து வகையான மக்கள் வாழும் நாட்டில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது குறிப்பாக ஏன் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
படத்தின் மதிப்பிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது நல்லதாகவும் இருக்கும் அல்லது கெட்டதாகவும் இருக்கும் என்று கூறிய நீதிபதிகள், திரையரங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்குவது மாநில அரசுகளின் கடமை என்று நீதிபதிகள் கூறினர்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடை செய்யப்பட்டத்திற்கான காரணங்களை இரண்டு மாநில அரசுகளும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.