டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

0
145

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், இன்னும் எத்தனை புறநகர்ப் பகுதிகள் தீக்கிரையாகுமோ என்று  பைடன் கேள்வி எழுப்பினார்.