உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!
இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
பணம் இருந்தால் தான் மதிப்பு.. என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டு விட்டது. இப்படி எதற்கும் பணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இவ்வாறு இருக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம் செய்யவும். கல் உப்பு பணத்தை வசியம் செய்யக் கூடிய ஒன்று. இந்த கல் உப்பு லட்சுமி தாயாருக்கு உகந்த பொருள். இவை வீட்டில் நிரம்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் கல் உப்பை வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். பணத்தின் வரவு அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய கல் உப்பு பரிகாரம்…
கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு எடுத்து வீட்டு நிலைவாசல், பூஜை அறை, வீட்டிற்கு ஏதெனும் ஒரு மூலையில் வைத்து விடவும். இந்த கல் உப்பை 3 நாட்களுக்கு அங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இந்த மூன்று இடங்களும் கல் உப்பின் மீது பார்வை படும் இடங்கள் ஆகும். மூன்று நாட்களுக்கு பின்னர் கல் உப்பை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.