Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Whatsapp Account Bans: விதிமீறல்.. ஏப்ரல் மாதத்தில் இத்தனை லட்ச கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!! அதிர்ச்சியில் இந்திய பயனர்கள்!

Whatsapp Account Bans: Violation .. WhatsApp company blocked so many lakh accounts in April!! Indian users in shock!

Whatsapp Account Bans: Violation .. WhatsApp company blocked so many lakh accounts in April!! Indian users in shock!

Whatsapp Account Bans: விதிமீறல்.. ஏப்ரல் மாதத்தில் இத்தனை லட்ச கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்!! அதிர்ச்சியில் இந்திய பயனர்கள்!

கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசானது 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதன்படி சமூக வலைதள நிறுவனங்கள்,பயனர்கள் அளித்த புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கை குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான வாட்ஸ்அப்,பயனர்களின் புகார் மற்றும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஏப்ரல் மாத அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.அந்த அறிக்கைபடி ஏப்ரல் மாதத்தில் விதிகளை மீறிய 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை அந்நிறுவனம் முடிகியுள்ளது.

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளது.வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த செயலி பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்தும் விதமாக விதிமீறல்களில் ஈடுபடும் பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 01 முதல் 30 ஆம் தேதி வரை 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Exit mobile version