குறிப்பிட்ட போன்களில் ஜனவரி 1 முதல் whatsapp பயன்படுத்த முடியாது!! மெட்டா நிறுவனம்!!

0
106
WhatsApp cannot be used on certain phones from January 1!! Meta Company!!

உலகில் இருக்கக்கூடிய அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொது செயலியாக whatsapp இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் உடைய இந்த செயலி வருகிற ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஒரு வருடம் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளது எனில் அவர்களால் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்றும், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது முந்தைய ஓ.எஸ்-ல் இயங்கும் போன்களிலும் whatsapp பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 க்கு பின் ஸ்மார்ட்போன்களை அதாவது புதிய அப்டேட்டில் வந்த ஸ்மார்ட்போன்களை வாங்கியவர்களுக்கு இதனால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் லிஸ்டில் உள்ளபடி எந்தெந்த செல்போன்களில் whatsapp இயங்காது என்பதை இங்கு காண்போம்.

✓ Samsung Galaxy Note 2
✓ Samsung Galaxy Ace 3
✓ Samsung Galaxy S4 Mini
✓ Moto G (1st Gen)
✓ Motorola Razr HD
✓ Moto E 2014
✓ HTC One X
✓ HTC One X+
✓ HTC Desire 500
✓ HTC Desire 601
✓ HTC Optimus G
✓ HTC Nexus 4
✓ LG G2 Mini
✓ LG L90
✓ Sony Xperia
✓ Sony Xperia SP
✓ Sony Xperia T
✓ Sony Xperia V

இந்த ஸ்மார்ட்போன்களில் whatsapp இயங்காது, எனவே இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தக் கூடியவர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன்களை மாற்றி அல்லது அப்டேட் செய்து கொள்ளுமாறும் மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.