வாட்ஸ் ஆப்பை எல்லாம் நம்ப முடியாது டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து!! பதிலடி கொடுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம்!!
உலகில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும், செயலியான வாட்ஸ் ஆப் செயலியை எல்லாம் நம்ப முடியாது என்று சமூக வலைதளமான டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும், வாட்ஸ் ஆப் போலி அழைப்பு மோசடியை வைத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது, சமீப தினங்களாக அனைவருக்கும் வாட்ஸ் ஆப் செயிலியில் இருந்து பல போலி அழைப்புகள் வருகிறது. இதனால் சிலர் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு வாட்ஸ் ஆப் செயலி மூலம் வந்த போலி அழைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர் டுவிட்டரில் இது குறித்து அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் பதிவிட்ட டுவீட்டில் “நான் தினமும் தூங்கும்போது வாட்ஸ் ஆப் செயலியானது மொபைல் போனின் மைக்ரோஃபோனை பின்னணியில் தானாகவே பயன்படுத்துகிறது” என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டிற்கு பதில் அளித்த எலான் மஸ்க் “வாட்ஸ் ஆப் செயலி நம்ப முடியாத ஒன்று” என்று பதில் அளித்துள்ளார். இதற்கு பதில் தெரிவித்த வாட்ஸ் ஆப் நிறுவனம் “பிழை எங்களால் அல்ல. அந்த பயனர் போனில் உள்ள ஆண்ட்ராய்டில் தான் பிழை உள்ளது” என்று தெரிவித்துள்ளது.