இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

0
179

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவையை இன்று முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு போன்களிலும், ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஐஓஎஸ்-களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியும் அதாவது 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இது வாட்ஸ்அப் பயனார்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌