Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ் அப்பிற்கு வந்த சோதனை! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!

இன்றைய உலகம் நாளுக்கு நாள் இணைய மயமாக்கி கொண்டே வருகின்றது .வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாட்ஸ்அப் ஒரு மிகப்பெரிய உதவியாக விளங்கி வருகிறது இந்த நிலையில், தான் போன்ற பல வங்கிகள் நிதி சேவையை தடை செய்திருக்கிறது.

இன்றைய உலகத்தில் இணையதளம் உதவியாக எந்த இடத்திற்கும் நாம் சென்றுவிட இயலும் என்ற ஒரு நிலையில் இருக்கின்றோம். அவ்வாறு போய் வருவதற்கு நமக்கு மிக முக்கிய உதவியாக இருப்பது கைப்பேசிகள். ஆனால் அதனை இன்னமும்கூட எளிதாக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நேரில் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பானத்தை பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை தற்சமயம் வந்திருக்கிறது..

இப்பொழுதெல்லாம் இணையதள வங்கி, கைபேசி வங்கி, என்று பலவிதமான வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் அதில் கிடைக்கும் சேவைகளை விடவும் இன்னும் எளிதான முறையில் மக்களுக்கு போய்ச் சேரும் விதமாக எச்டிஎஃப்சி வங்கி போன்ற பல வங்கிகள் வாட்ஸ்அப் நிதி சேவைகளை வழங்கி வருகின்றன.

சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலமாக வங்கியில் இருக்கக்கூடிய இருப்புத் தொகை தெரிந்து கொள்ள இயலும். அதோடு கடன் அட்டைகள் நிலுவைத்தொகை போன்றவற்றை இந்த வாட்ஸப் மூலமாகவே இருந்த இடத்தில் இருந்தே நாம் தெரிந்து கொள்ள இயலும். அதோடு இன்னும் பல சேவைகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கிறது அதிலும் குறிப்பாக ஐ எஃப் எஸ் சி கோடு வங்கி விடுமுறை நாட்கள் என்று பலவற்றையும் தெரிந்து கொள்ள இயலும்.

அதோடு வங்கியில் இருப்பதைப் போலவே ஸ்டேட்மெண்ட் மற்றும் பதிவு செய்வது போன்றவற்றுக்கான விண்ணப்பம் போன்றவற்றையும் இதிலிருந்தே நாம் செய்து கொள்ளலாம் அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடன் அட்டை வைத்திருப்பவர்கள் நிலுவையில் இருக்கின்ற பாக்கி தொகையை எவ்வளவு என்று அறிந்து கொள்வது அதோடு அந்த இடத்தையும் பெற்றுக் கொள்வது போன்ற எண்ணற்ற வசதிகள் இருக்கின்றன இந்த வாட்ஸ் அப்பில்.

இந்த சூழ்நிலையில் ,வாட்ஸ்அப் நிறுவனமானது எடுத்துக்கொண்ட பாலிசி முடிவு போன்றவற்றை காரணமாக வைத்து ஹெச்டிஎப்சி வங்கி போன்ற பல வங்கிகள் வாட்ஸ் அப்பில் நடைபெறக்கூடிய சேவைகளை தடை செய்திருக்கின்றன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள். அதேநேரம் வாடிக்கையாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version