Watsapp: 2025 மே 5 முதல், iPhone 5s, iPhone 6, மற்றும் iPhone 6 Plus போன்ற பழைய iPhone மாடல்களுக்கு வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பரிமாற முடியாது.
வாட்ஸ்அப் தனது செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்த புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாற்றம் iOS 15.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் iPhone 5s, 6, மற்றும் 6 Plus மாடல்கள், iOS 12.5.7 வரை மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதால், புதிய அம்சங்களுடன் இணைய முடியாது.
வாட்ஸ்அப், இந்த மாற்றத்தை முன்னதாக அறிவித்து, பயனர்களுக்கு 5 மாதங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், பழைய மாடல்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களின் சாதனங்களை புதுப்பிக்க அல்லது புதிய iPhone-களை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை பயனர் அனுபவத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
chat Lock: தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாப்பாக வைக்க.
video Message: உடனடி வீடியோ வழியாக தகவல்களை பகிர. போன்ற மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
iOS 12.5.7 வரை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் சேவை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளனர்.
இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு சவாலாக இருந்தாலும், சமூக ஊடக பயன்பாட்டில் பாதுகாப்பான மற்றும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்ய தேவையான முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.