வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட் வசதி! மகிழ்ச்சியில் பயனர்கள்

0
137

தற்போது இருக்கும் அதிவேக உலகத்தில் உலகத்தில் இருக்கக்கூடிய பல கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதன்காரணமாக, உற்சாகமடைந்த அந்த நிறுவனம் அவ்வபோது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அவர்கள் கொடுக்கும் அப்டேட் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்சமயம் அநேக தகவல் பரிமாற்றம் வாட்ஸப்பில் தான் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தனிநபர் தகவல் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றை கொடுத்தது. அனைவருடைய தகவல்களும் பாதுகாக்கப்படும் என்று அந்த நிறுவனம் உறுதி அளித்திருந்தது இதன் காரணமாக அந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது இதனால் தொடர்ச்சியாக வெற்றிகரமான செயலியாக வட்ஸ்அப் நிறுவனம் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் வாட்ஸ்அப் நிறுவனம் செய்திகளை மறைய வைக்கும் டிசப்பேரிங் மெஸேஜஸ் என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பும் செய்தி மற்றும் நாம் பெறும் செய்தியை மறைய வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான கட்டுப்பாடு வாட்ஸ்அப் பயனர்களின் கையில் இருக்கும் 24 மணி நேரம் அல்லது ஏழு தினங்களுக்கு என்ற இரண்டு தேர்வு இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் மூலமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.