Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ்அப் யூசர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. உங்கள் மொத்த பணமும் போய்விடும்!!

Whatsapp users just don't make this mistake.. your whole money will be gone!!

Whatsapp users just don't make this mistake.. your whole money will be gone!!

வாட்ஸ்அப் யூசர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. உங்கள் மொத்த பணமும் போய்விடும்!!

இன்றைய உலகம் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.சமூக வலைத்தளங்களான யூட்டியூப்,வாட்ஸ்அப்,முகநூல்,இன்டஸ்டகிராம் வாயிலாக பல தகவல்களை நிமிடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவையா? இல்லையா? என்பது நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது.மொபைல் போனில் குறுஞ்செய்தியாக வரக் கூடிய எந்த லிங்க்கையும் டச் செய்யாதீர்கள்.

பெரும்பாலும் SMS,வாட்ஸ்அப் போன்றவற்றில் தான் இதுபோன்ற மோசடி லிங்க்குகள் வருகின்றது.இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருடப்பட்டு பணம் சார்ந்த மோசடி நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

வாட்ஸ்அப் யூசர்கள் செய்ய கூடாத தவறுகள்:

*உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு தேவையில்லாத நம்பரில் இருந்து பணம் சார்ந்த மெசேஜ் வந்தால் அதை உடனே ப்ளாக் செய்து விடுங்கள்.அதேபோல் உங்களுக்கு தெரியாத வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் இணைப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனே அந்த குழுவில் இருந்து வெளியேறி விடுங்கள்.

*உங்களுடைய வங்கி கணக்கு எண்,கடவுச்சொல்,OTP போன்ற தகவல்களை எவருக்கும் பகிராதீர்கள்.

*வாட்ஸ்அப்பில் வரும் லிங்குகள் குறித்த தெளிவு இல்லாமல் அதை கிளிக் செய்யாதீர்கள்.பெரும்பாலான லிங்குங்கள் மோசடி ஏற்படுத்துபவையாக இருக்கிறது.இந்த லிங்குகளைக் கிளிக் செய்வதால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் முழுமையாக திருடப்பட்டு விடும்.

*உங்கள் போனிற்கு உறுதியான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.இதனால் ஹேக் செய்யப்படுவது தடுக்கப்படும்.அது மட்டுமின்றி உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற வேண்டும்.இதனால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படுவது தடுக்கப்படும்.

Exit mobile version