கோதுமை மாவு இடியாப்பம்! ஆஹா என்ன ருசி!

0
183

கோதுமை மாவு இடியாப்பம்! ஆஹா என்ன ருசி!

தேவையான பொருட்கள் :

இரண்டு கப் கோதுமை மாவு,அரை கப் அரிசி மாவு, தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு.

செய்முறை :முதலில்   வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த மாவை சுத்தமான துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.அவை வெந்த பிறகு கட்டிகளின்றி சலித்து ஆற வைக்க வேண்டும்.

அதன் பிறகு சலித்த கோதுமை மாவுடன் அரிசி மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.பின்பு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்ப தட்டிலோ அல்லது இட்லி தட்டிலோ பிழிய வேண்டும்.

அதன் பிறகு பிழிந்த இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.மென்மையான, சுவையான கோதுமை இடியாப்பம் தயார். மேலும் இதனை தேங்காய்ப் பால் அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.