கோதுமை ரவையில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? நாவூற வைக்கும் சூப்பர் ரெசிபி..!

0
136

கோதுமை ரவையில் இட்லி, உப்புமா, கிச்சடி போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம்.ஆனால், கோதுவையைல் ரவையில் சுவையான பாயாசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? உங்களுக்காக சூப்பர் ரெசிபி.

தேவையானவை :

கோதுமை ரவை – 1 கப் ஜவ்வரிசி – அரை கப் தண்ணீர் – 3 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப் தேங்காய் பால் – 3 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் முந்திரி – விருப்பத்திற்கேற்ப நெய் – விருப்பத்திற்கேற்ப

செய்முறை :

ஜவ்வரிசியை ஊறவைத்து கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து கொள்ளுங்கள்.

அதில் நெய் சேர்த்து கோதுமை ரவையை வாசம் போகும் வரை வறுத்து கொள்ளுங்கள்.

அதன் பின், ஒரு குக்கரில் நீர் ஊற்றி கோதுமை ரவை, ஜவ்வரிசி சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள்.

மற்றொரு வாணலியில் வேகவைத்த ரவையை ஊற்றி அதில், உங்கள் விரும்பத்திற்கெற்ப வெல்லம் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

அது கெட்டியானதும் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்குவதற்கு முன் நெய்யில் வறுத்த முந்திரி,ஏலக்காய் சேர்த்து இறக்கி பரிமாறலாம்.