வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!
அல்வா என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். அல்வாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது அல்வா.
சின்ன எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலேயே கோதுமை அல்வா எப்படி செய்வது? என்று பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
1. சம்பா கோதுமை -1கப்
2. நெய் -1/2 கப்
3. ஏலக்காய் தூள் -1 தேக்கரண்டி
4. சர்க்கரை 1 கப்
5. முந்திரிப்பருப்பு வறுத்தது.
செய்முறை:
1. முதலில் சம்பா கோதுமையை எடுத்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. எட்டு மணி நேரம் ஊறிய கோதுமையை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி கோதுமைப் பால் எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் நெய் மற்றும் கோதுமை பாலை ஊற்றி அதன் பின் அடுப்பை பற்ற வைக்கவும்.
4. பால் கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.மற்றும் பாதி அளவு சர்க்கரை சேர்க்கவும்.
5.மீதமுள்ள அரை கப் சர்க்கரை மற்றொரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க விடவும்.
6. சர்க்கரை நிறம் மாறியதும் அல்வாவில் ஊற்றி கிளறி விடவும்.
7. பிறகு இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி கிளறிவிடவும்.
8. அல்வா நன்கு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
9. அல்வா பரிமாறும் பாத்திரத்தில் நெய் தடவி முந்திரிப் பருப்புகளை அல்வாவில் போட்டு பரிமாறவும்.
சுவையான கோதுமை அல்வா தயார். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாராட்டைப் பெறுங்கள்.