Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

இன்றைய நாளில் இருக்கக்கூடிய தங்கத்தின் விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட மிகவும் கடினம். அவ்வாறு இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சிறிதளவாவது தங்கம் என்பதை கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது இந்த ஒரு பொருளையும் வாங்கி, இந்த புதிய தங்கத்துடன் இந்த பொருளையும் சேர்த்து வைத்து பாருங்கள் நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.

நாம் புதியதாக தங்கம் வாங்குகிறோம் என்றால் காலை அல்லது பகல் நேரங்களில் தான் வாங்க வேண்டும். விளக்கு வைத்த பிறகு அதாவது மாலை 6 மணிக்கு பின்பாக தங்கத்தை வாங்க கூடாது. இதற்கு முன்பாக மாலை 6 மணிக்கு பிறகு வாங்கிய நகைகள் இருந்தால், அந்த நகைகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் அல்லது அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

அதேபோன்று தங்கம் வாங்கும் பொழுது நல்ல நேரம் மற்றும் குளிகை நேரம் ஆகியவற்றை பார்த்து வாங்குவது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக குளிகை நேரம் மிக மிக சிறப்பானது. ஏனென்றால் குளிகை நேரத்தில் நாம் வாங்கக்கூடிய மற்றும் செய்யக்கூடிய செயல் மீண்டும் மீண்டும் நமது வாழ்க்கையில் நடைபெறும்.

முருகருக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் தங்க நகை வாங்குவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இந்த கிழமையில் வாங்கும் பொழுது தங்க நகை மென்மேலும் சேரும். அதேபோன்று குரு பகவானுக்கு உரிய வியாழன் கிழமை அன்றும் தங்க நகைகளை வாங்கலாம்.

சனிக் கிழமையை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமை தங்க நகையை வாங்கினால், வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் பொழுது அதனுடன் துவரம் பருப்பையும் சேர்த்து வாங்க வேண்டும்.

வியாழன் கிழமை அன்று வாங்கினால் சுண்டலையும் சேர்த்து வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. திங்கள் கிழமையில் வாங்கினால் அரிசி வாங்குவது நல்லது. புதன்கிழமை தங்க நகையை வாங்கினால் பச்சைப்பயிறு வாங்குவது நல்லது.

இவை அல்லாமல் தங்க நகை வாங்கும் பொழுது பொதுவாக சில பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது துளசி, கண்ணாடி, பச்சை கற்பூரம், இலவங்கம் பூ,குங்குமம் இதுபோன்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். தங்க நகைகள் வாங்குவதற்கு அமாவாசை மற்றும் சந்திராஷ்டமம் நாட்களை தவிர்ப்பது நல்லது.

புதிய தங்கம் வாங்கினாலும் கூட, அதனை வீட்டிற்கு வந்ததும் பன்னீர் அல்லது தண்ணீரைக் கொண்டு கழுவி, நன்றாக துடைத்து அது உணர்ந்த பின்னர் அதனுடன் நாம் வாங்கி வந்த கண்ணாடி, பச்சை கற்பூரம், லவங்கம் பூ இதனையும் உடன் சேர்த்து வைக்க வேண்டும்.

அந்தக் கண்ணாடியில் நாம் வைக்கக்கூடிய தங்கமானது தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது தங்க நகைகள் நம்மிடம் சேரும் மேலும் அடமானத்திற்கு செல்லாமலும் இருக்கும்.

Exit mobile version