தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றியும், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கைகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் 2 கோடி மதிப்பிலான பராமரிப்பு திட்டங்கள், அடிப்படை வசதிகள், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான மேம்பாட்டுப் பணிகளை இன்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதிதாக எந்த ஒரு சேர்க்கையும் நடத்தக்கூடாது எனவும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரத்திற்காக வெளியிடக்கூடாது எனவும் தெரிவித்தார். மீறி விளம்பரப் பலகைகள் வைத்தால் நடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு பிறகே வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பள்ளிகள் திறப்பதற்கான சூழலை பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு எடுக்கப்படும். கொரானா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை.