Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக் கட்டணம் எப்போது அமலுக்கு வருகிறது? எலான் மஸ்க் வழங்கிய தகவல்!

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ட்விட்டர் சமூக வலைதளத்தை உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார்.

இதனை அடுத்து அவர் தன்னுடைய சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில், அவர்களுடைய பெயருக்கருகில் ப்ளூடிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த ப்ளூடிக் சேவைக்கு இனி மாதம் தோறும் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது ஆனாலும் மாதாந்திர கட்டணத்தை அமல்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கட்டண முறை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்று twitter தளத்தில் இந்தியர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு எலான்னஸ்க் தெரிவித்திருப்பதாவது இந்தியாவில் இந்த மாதத்திற்குள் இந்த கட்டண முறை அறிமுகமாகும். இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எலான் மஸ்க் பதில் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version