எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்!

0
303
When Group 4 Result? Candidates trending memes and hashtags!

எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை  ட்ரெண்ட்  செய்து வரும் தேர்வர்கள்!

குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தேர்வுகள் ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவித்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 20,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 59 நில அளவையர், 24 வரைவாளர், 1,901 தட்டச்சர் , 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் 731 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு 2022 ஜூலை மாதம் 22ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2942 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் மட்டுமே எழுதினார்கள். அதாவது ஒரு பணியிடத்திற்கு 253 பேர் போட்டியிட்டு உள்ளனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை அதனை தொடர்ந்து தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வின் முடிவு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கடந்த மாதம் 14ஆம் தேதி இது தொடர்பாக டிஎன்பிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில் மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இடங்கள் சேர்க்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை. இவ்வாறு தேர்வு முடிவு வெளியிடுவதில் காலதாமதம்  ஏற்பட்டதால் தேர்வர்கள் மீம்ஸ் மூலம் நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி இடம் சொல்வது போல வீட்ல எவ்வளவு நாள் தாண்டா சோறு சாப்பிடுவேன்னு கேக்குறாங்க சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கலயாடா வீட்டிலேயே இருக்கான்னு சொல்றாங்க எக்ஸாம் நல்லா பண்ணி இருக்கேன் இந்த மாத ரிசல்ட் மட்டும் விட்டாங்கன்னா வேலைக்கு போயிடுவேன் என பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு மீம்ஸ் மூலம்  குரூப் 1 எழுதினவன்  எப்போ ரிசல்ட் வரும்னு காத்திருக்கான், குரூப் 2 முதன்மை தேர்வு எழுதினவன் எப்படி திருத்துவாங்களோ எந்த வருஷம் ரிசல்ட் போடுவாங்களோ இருக்கான் , குரூப் 4 எழுதுனவன் ரிசல்ட் ஒன்னு இருக்கான்னு தேடிட்டு இருக்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.