சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் எப்போது? அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

0
114

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நடைபெறுகிறது. அதோடு இந்த கூட்டம் 4 தினங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புதிய தொழில் முதலீட்டுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.